தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மருத்துவக் காப்பீட்டுத் திட்ட விளம்பரத்தில் நடித்த தன்யா - actress tanya ravichandran movies

சென்னை: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்த தன்யா ரவிச்சந்திரனுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

தன்யா
தன்யா

By

Published : Jun 24, 2021, 1:47 PM IST

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து சமீபத்தில் எடுக்கப்பட்ட விழிப்புணர்வு விளம்பரத்தில் தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். அக்குறும்படம் அனைத்து முன்னணி தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி, பலரிடம் பாராட்டுகளைப் பெற்றது.

இது குறித்து விழிப்புணர்வு விளம்பரத்தை இயக்கிய இ.வி. கணேஷ்பாபு, "கரோனா இரண்டாம் அலையிலிருந்து தமிழ்நாடு மக்களை மீட்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயலாற்றி, அதில் வெற்றியும் கண்டுவருகிறார்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட எளிய மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், எளிமைப்படுத்தப்பட்டு இன்று பல உயிர்களைக் காத்துவருகிறது. இத்திட்டம் பற்றிய குறும்படத்தை நான் இயக்கியதில் பெருமையடைகிறேன்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்த விளம்பரம்

எளிய மக்களுக்கும் புரியும் வகையில் காப்பீட்டுத் திட்டம் குறித்து இந்தக் குறும்படத்தை இயக்கியிருக்கிறேன். மேலும் சாயாதேவி, யார் கண்ணன் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். இக்குறும்படத்தை இயக்கியது எனக்கு மனநிறைவைத் தந்துள்ளது" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:ரூ. 1.75 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய அமிதாப் பச்சன்

ABOUT THE AUTHOR

...view details