தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மீண்டும் நடிக்க ரெடி- தல தளபதியின் நாயகி! - Thala

நடிகர் அஜித் - விஜய் படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்ற நடிகை ஸ்வாதி, மீண்டும் திரைப்படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்வாதி

By

Published : Mar 21, 2019, 11:30 PM IST

நடிகர் விஜய்யுடன் 'தேவா' திரைப்படத்திலும், நடிகர் அஜீத்துடன் 'வான்மதி' திரைப்படத்திலும் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி. இரண்டு படங்களும் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், ஸ்வாதி அதை நிராகரித்துவிட்டு படிப்புதான் முக்கியம் என்று ஹைதராபாத்திற்கு சென்றுவிட்டார். அதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப்பின் அவர் மீண்டும் இயக்குநர் அமீர் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான 'யோகி' படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஸ்வாதி, தற்போது தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கவும் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய ஸ்வாதி,

நான் நடித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும், தமிழ் ரசிகர்கள் தன்னை மீண்டும் எப்பொழுது திரையில் தோன்றுவீர்கள்? என்று ஆவலுடன் கேட்கிறார்கள். அவர்கள் 'மேக்கப்' இல்லாமல் சென்றாலும் கூட அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அப்படி ஒரு பயணத்தின் போது ஒரு தம்பதியரை சந்திக்க நேர்ந்தது. அந்த சந்திப்பிலிருந்து தான் எனக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

என் குடும்பத்தாரும் எனக்கு முழு ஆதரவோடு இருக்கிறார்கள். நான் அவ்வப்பொழுது படங்களைப் பார்த்து வருகிறேன். இப்பொழுதுள்ள சினிமா முன்பைவிட தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. சினிமாவை மிகவும் நேசிக்கிறேன். என் ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க நல்வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன். அதற்கான வாய்ப்பும், நல்ல கதையும் அமைந்தால் மீண்டும் நடிக்க உள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details