நாளுக்கு நாள் பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்தியாவில் பல மாநிலங்களில் பெட்ரோலின் விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளது.
விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டி நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு தரப்பினரும் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டும் கண்டனக் குரல்கள் எழுப்பியும் வருகின்றனர்.