தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிருஷ்டி டாங்கே நடிக்கும் 'கட்டில்' பட பூஜை - 'ஆடுகளம்' நரேன்

பாரம்பரியமான கட்டிலை முதன்மை கதாபாத்திரமாக வைத்து கட்டில் என்ற பெயரில் மதுரைப் பின்னணியில் புதிய படம் தயாராகவுள்ளது.

நடிகை சிருஷ்டி டாங்கே

By

Published : Oct 9, 2019, 3:52 PM IST

சென்னை: 'கட்டில்' என்ற பெயரில் உருவாகும் புதிய படம் சென்னை பிரசாத் லேபில் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

இந்த விழாவில் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கலந்துகொண்டு பூஜையை தொடங்கி வைத்தார். 'கட்டில்' படத்தை ஈ.வி.கணேஷ் பாபு தயாரித்து, நடித்து, இயக்குகிறார்.

இந்தப் படத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு கட்டில்தான் முதன்மை கதாபாத்திரமாக உள்ளது என்றும், படம் முழுக்க முழுக்க மதுரையை கதைக்களமாகக் கொண்டு தயாராக உள்ளதால் அனைத்து நடிகர்களுக்கும் மதுரை வட்டார வழக்கு பயிற்சி அளிக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது என்றும் கதாநாயகன் தெரிவித்தார்.

படத்தில் நடிகை சிருஷ்டி டாங்கே, 'ஆடுகளம்' நரேன் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.

ஒளிப்பதிவு - 'வைட் ஆங்கிள்' ரவி சங்கர். கதை, திரைக்கதை மற்றும் உரையாடல் பி.லெனின். இசை - எலகியன்
கலை - பி.கிருஷ்ணமூர்த்தி. படத்தின் படப்பிடிப்பு விரைவில் மதுரையில் தொடங்கவுள்ளது

சிருஷ்டி டாங்கே நடிக்கும் 'கட்டில்' பட பூஜை

ABOUT THE AUTHOR

...view details