தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'கர்ப்பமாக இருந்ததால் தற்கொலை செய்து கொள்ளவில்லை' - அதிர்ச்சி தகவல் வெளியிட்ட சோமியா சேத்! - Sushanth Singh rajput suicide

நடிகை சோமியா சேத் தான் கர்ப்பமாக இருந்ததால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை கைவிட்டேன் என்று கூறியுள்ளார்.

Soumya
Soumya

By

Published : Jun 16, 2020, 1:37 AM IST

நடிகர் சுஷந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் பிரச்னைக்கு தீர்வு தற்கொலை இல்லை என்று சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சுஷாந்த் சிங் மரணம் குறித்து பாலிவுட் நடிகை சோமியா சேத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ''தற்கொலை, இந்த சொல்லே மிகக் கடினமான வார்த்தை அடங்கியுள்ளது. நீங்கள் அந்த நிலைக்கு சென்றால் உடனே, உங்கள் நண்பர்களை அழையுங்கள். அல்லது உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசுங்கள். அப்படியும் இல்லையென்றால் கண்ணாடி முன்னாள் நின்று உங்களை பார்த்து பேசுங்கள். எல்லா பிரச்னைகளும் ஒரு நாள் சரியாகிவிடும். எனக்கும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றியது.

ஆனால் நான் அதை செய்யவில்லை. காரணம் அப்போது நான் கர்ப்பமாக இருந்தேன். நான் மட்டும் இருந்தால் நிச்சயம் தற்கொலை செய்திருப்பேன். எல்லோருக்கும் தற்கொலை எண்ணம் வரலாம்.

உங்களை நேசிப்பவர்கள், உங்களின் வார்த்தைகளை கேட்பதற்காக காத்திருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details