பாலிவுட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி பம்பர் ஹிட் அடித்த திரைப்படம் 'அந்தாதூன்'. ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரேனா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் இந்தப் படம் பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதையும் பெற்றது.
அந்தாதூன் தமிழ் ரீமேக் படக்குழுவினர் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் கைப்பற்றி தனது மகன் பிரசாந்தை வைத்து எடுத்து வருகிறார். இதனை 'பொன்மகள் வந்தாள்' படத்தின் இயக்குநர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்குகிறார்.
அந்தாதூன் தமிழ் ரீமேக்கில் சிம்ரன் இந்நிலையில் இப்படத்தில் நடித்த தபு கதாபாத்திரத்தில் நடிக்க பல்வேறு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் தற்போது சிம்ரன் ஒப்பந்தமாகி உள்ளார். இதனை அப்படக்குழுவினர் உறுதி படுத்தியுள்ளனர்.
ஏற்கனவே 'ஜோடி', 'தமிழ்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் இணைந்து நடித்து வெற்றி பெற்ற பிரசாந்த் - சிம்ரன் ஜோடி நீண்ட வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் இடையே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.