தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

யூடியூப் சேனல் தொடங்கிய நடிகை ஸ்ருதி ஹாசன்! - யூடியூப் சேனல்

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது ரசிகர்களுக்கு தன் படைப்பு திறமைகளை அள்ளிக்கொடுக்க யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார்.

யூடியூப் சேனல் தொடங்கிய நடிகை சுருதிஹாசன்!
யூடியூப் சேனல் தொடங்கிய நடிகை சுருதிஹாசன்!

By

Published : Jul 21, 2020, 11:04 PM IST

நடிகை ஸ்ருதி ஹாசன் சமூக ஊடகத்தில் தனது ரசிகர்களுடன் நிறைய நேரத்தை செலவிட்டுவருகிறார். தற்போது தன்னைப் பற்றி ரசிகர்கள் இன்னும் கூடுதலாகத் தெரிந்துகொள்ள புதிய தளத்தில், அதாவது யூடியூப் சேனலில் காலடி எடுத்து வைக்கிறார்.

இந்த சேனலில் ஆரோக்கியம், உடற்பயிற்சி, சமையல் கலை, ஒப்பனை குறிப்புகள் என தனது ரசிகர்களுக்காக செய்து வரும் ஸ்ருதி, தனது இசை சுற்றுப் பயணத்திலிருந்து இதுவரை யாரும் பார்த்திராத காணொலிகளையும், தான் மெட்டமைத்திருக்கும் பாடல்களின் முன்னோட்டங்களையும் இதன் வாயிலாக வெளியிடவுள்ளார்.

இது குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் கூறுகையில், “சமூக ஊடகத்தில் ரசிகர்களுடன் உரையாடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. தொடர்ந்து இயங்கும் ஒரு யூடியூப் சேனல்தான் அடுத்த சரியான படியாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனது அசல் படைப்புகள், எனது இசை நிகழ்ச்சிகளின் காணொலிகள், இசை நிகழ்ச்சிகளுக்கு பின்னால் நடந்த ஏற்பாடுகள் குறித்த காணொலிகள் என அனைத்தும் என் யூடியூப் சேனலில் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க...'மாநாடு' பட அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்!

ABOUT THE AUTHOR

...view details