தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'இதுதான் என் முகம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்' - ஸ்ருதிஹாசன்

''பிரபலமானவராக இருந்தாலும் சரி; சாதாரணமானவராக இருந்தாலும் சரி ஒரு மனிதரைப் பற்றி இன்னொரு மனிதர் விமர்சிக்கும் உரிமை இல்லை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். இது என் வாழ்க்கை. இதுதான் என் முகம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்" என நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

shruthi hassan
shruthi hassan

By

Published : Feb 28, 2020, 2:47 PM IST

சமூக வலைதளத்தில் தனக்கு ஏற்பட்ட கிண்டல் பதிவுகள் தொடர்பாக ஸ்ருதி ஹாசன் உருக்கமானப் பதிவு ஒன்றை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை, பாடகி என பன்முகம் கொண்ட ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது 'இயற்கை', 'ஈ', 'பேராண்மை', 'புறம்போக்கு எனும் பொதுவுடைமை' ஆகிய நல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'லாபம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளத்தில் மிக ஆக்டிவாக செயல்பட்டு வரும், ஸ்ருதி சில மாதங்களுக்கு முன் தனது மூக்கில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின் எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டார். அதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் வயதாகி விட்டதாக கிண்டல் செய்து வந்தனர்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் அறுவை சிகிச்சைக்கு முன், பின் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் ஸ்ருதிஹாசன் கூறியிருப்பதாவது, ' என்னுடைய முந்தைய நிலைத் தகவலுக்குப் பிறகு இந்த இரண்டாவது நிலை தகவலையும் பதிவிட முடிவெடுத்தேன். ஏன் என்று கூறுகிறேன். என்னைப் பற்றி பிறர் கூறும் கருத்துகள் மூலம் என் வாழ்க்கையை நான் நடத்துபவரல்ல. ஆனால், தொடர்ந்து குண்டாக இருக்கிறேன், ஒல்லியாக இருக்கிறேன் என்ற கருத்துகள் தவிர்க்கப்பட வேண்டியவை.

இந்த இரண்டு படங்களும் மூன்று நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்டவை. எனது ஹார்மோனின் கருணையால் எனது உடலும் மனதும் சீராக இருந்து வருகிறது. சில ஆண்டுகளாக ஹார்மோன்களை ஆரோக்கியமான முறையில் வைத்திருக்க பாடுபடுகிறேன். அது சுலபமல்ல. வலி நிறைந்தது. உடல் மாற்றங்கள் சுலபமல்ல. ஆனால் எனது அனுபத்தை பகிர்ந்து கொள்வது எளிது.

பிரபலமானவராக இருந்தாலும் சரி சாதாரணமானவராக இருந்தாலும் சரி, ஒரு மனிதரைப் பற்றி இன்னொரு மனிதர் விமர்சிக்கும் உரிமை இல்லை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். இது என் வாழ்க்கை. இதுதான் என் முகம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.

ஆமாம். நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன். இதனை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. நான் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு ஆதரவளித்தோ எதிர்த்தோ இருந்தது இல்லை. நமக்கு நாமே செய்து கொள்ளக் கூடிய சாதகம் என்னவெனில் நம் உடல், மனம் ஆகியவற்றின் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்வதே. இப்படி வாழ்வதைத்தான் நான் தேர்ந்தெடுத்துள்ளேன்.

அன்பை பரப்புங்கள். நான் ஒவ்வொரு நாளும் என்னை நேசிக்க கற்றுக்கொண்டு வருகிறேன். என்னைப் பொறுத்தவரை அதிக அன்பு தேவைப்படுகிறது. காரணம் என் வாழ்க்கையின் மிகப்பெரிய காதல் கதை இருக்கிறது. இது உங்களுக்கும் பொருந்தும் என நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

இதையும் வாசிங்க:இசைப் பலகையில் பெயர்: மகிழ்ச்சியில் நடனமாடிய ஷ்ருதி!

ABOUT THE AUTHOR

...view details