தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 10, 2019, 1:13 PM IST

ETV Bharat / sitara

'தர்பார்' படத்தில் சஸ்பென்ஸ் கேரக்டரில் மற்றொரு கதாநாயகி?

'தர்பார்' படத்தில் அடுத்த சர்ப்பிரைஸாக மற்றொரு கதாநாயகி இணைந்துள்ளதாக தகவல் உலா வருகிறது. இதுதொடர்பாக வெளியாகியிருக்கும் புகைப்படமும் அதை உறுதிப்படுத்தியுள்ளது.

நடிகை ஸ்ரேயா

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'தர்பார்' படத்தில் மற்றொரு நாயகியாக நடிகை ஸ்ரேயா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிக்கே உரித்தான மாஸ் கதையம்சத்துடன் 'தர்பார்' படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு போலீஸ் கேரக்டரில் ரஜினி தோன்றவுள்ளார். இதையடுத்து படத்தின் தனது பகுதி காட்சிகளை முடித்துவிட்டு கடந்த வாரம் சென்னை திரும்பினார் ரஜினி. கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்த நிலையில், நடிகை ஸ்ரேயா சரண் 'தர்பார்' படத்தில் மற்றொரு நாயகியாக இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்துள்ளார் ஸ்ரேயா.

ஆக்ஷன் காட்சி படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிகை ஸ்ரேயா, இயக்குநர் முருகதாஸ், ஃபைட் மாஸ்டர் பீட்டர் ஹெயின் ஆகியோர் உள்ளனர்.

இதையடுத்து படத்தில் சிறிய வேடத்தில் ஸ்ரேயா நடித்திருப்பதாகவும், அவரது கேரக்டரை சஸ்பென்ஸாக படக்குழுவினர் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே ரஜினி-ஸ்ரேயா ஆகியோர் 'சிவாஜி' படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அந்தப் படத்தில் நயன்தாரா சிறப்பு தோற்றத்தில் வந்து ஒரு பாடலுக்கு நடனமாடினார்.

இதைத்தொடர்ந்து தற்போது ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் 'தர்பார்' படத்தில் ஸ்ரேயா கேமியா கேரக்டரில் சர்ப்ரைஸாக தோன்றவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details