தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அட நம்ம துள்ளுவதோ இளமை ஷெரினா இது - ஷாக்கான நெட்டிசன்கள் - Latest cinema news

நடிகை ஷெரின் உடல் எடையை குறைத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஷெரின்
ஷெரின்

By

Published : Jul 6, 2020, 10:56 PM IST

'துள்ளுவதோ இளமை' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர், நடிப்பிற்கு சிறிது இடைவெளி கொடுத்தார்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் லைம்லைட்டிற்கு வந்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின்போது உடல் எடை அதிகமாக இருந்த ஷெரின், தற்போது ஆச்சரியப்படும் வகையில் தனது உடல் எடையில் 10 கிலோ குறைத்துள்ளர். பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானபோது இருந்த மாதிரியே இருக்கிறார்.

இதுகுறித்து அவர், ‘ஒரே வருடத்தில் 10 கிலோ எடை குறைந்து தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது தோற்றத்தை பார்க்கும்போது எனக்கே பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது" என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details