‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. இதையடுத்து இவர் ‘திருட்டுப்பயலே 2’, ‘மிஸ்டர் லோக்கல்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
ரசிகரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன் பட நடிகை! - லேட்டஸ்ட் கோலிவுட் செய்திகள்
நடிகை ஷாலு ஷம்மு தனது ரசிகரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களை வீட்டுக்கு அழைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
ஷாலு
ஷாலு தற்போது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு அவ்வப்போது தனது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.
இந்நிலையில் அவர், சமீபத்தில் தனது இரண்டு ரசிகர்களை வீட்டிற்கு அழைத்து கேக் வெட்டி அவர்கள் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். பொதுவாக ரசிகர்கள்தான் நடிகைகளின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுவார்கள். ஆனால் ஷாலு, ரசிகர்களின் பிறந்தநாளை கொண்டாடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.