தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிரபல நடிகையை தாக்கி செல்போன் பறிப்பு - ஷாலு செல்போன் பறிப்பு

தெலுங்கு நடிகை ஷாலு சௌராசியாவை தாக்கி அடையாளம் தெரியாத நபர்கள் செல்போன் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாலு
ஷாலு

By

Published : Nov 16, 2021, 5:09 PM IST

தெலுங்கு சினிமாவில் 'ஆரண்யம்லோ', 'ஓ பில்லா நீ வல்லா' ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர், ஷாலு சௌராசியா. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.14) இரவு 8.30 மணிக்கு கே.பி.ஆர்.பார்க்கில் வாக்கிங் சென்றிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அவரை மிரட்டி பணம், நகை கொடுக்குமாறு மிரட்டினர். அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்க உடனே ஷாலுவின் முகத்தில் குத்திவிட்டு கல்லால் தாக்கியுள்ளனர். மேலும் அவரிடமிருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.

இதனால் அவரின் முகத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும் ஷாலு இச்சம்பவம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரின் பேரில் சம்பவம் நடத்த இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மைக் டைசனுடன் சண்டைபோடும் விஜய் தேவரகொண்டா

ABOUT THE AUTHOR

...view details