தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஹீரோயினாகும் விஜய் தங்கச்சி! - சஞ்சனா சாரதி படங்கள்

'துப்பாக்கி' படத்தில் விஜயின் தங்கையாக நடித்த சஞ்சனா சாரதி தற்போது கதையின் நாயகியாக நடிக்கிறார்.

actress Sanjana Sarathy
actress Sanjana Sarathy

By

Published : Mar 24, 2021, 7:39 PM IST

தமிழில் 'துப்பாக்கி' படத்தில் விஜயின் தங்கையாகவும், 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் சிறு வேடத்திலும் நடித்த நடிகை சஞ்சனா சாரதி, இப்பொழுது தெலுங்கில், நவீன் சந்திரா நாயகனாக நடிக்கும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

நாயகியாக அறிமுகமாவது குறித்து சஞ்சனா சாரதி கூறியதாவது, "தெலுங்கில் இது எனக்கு முதல் படம். படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த, படக்குழுவினருக்கு எனது நன்றிகள். இது உணர்வுகள், நகைச்சுவை, காதல் நிறைந்த கமர்ஷியல், குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம்.

நடிகை சஞ்சனா சாரதி

நான் மிகவும் இளம் வயதிலயே எனது சினிமா வாழ்க்கைக்கு வந்துவிட்டேன். பெரும்பாலும் தங்கை கதாபாத்திரத்திற்கே என்னை ஒப்பந்தம் செய்தார்கள். அதனால்தான் நடிப்பிலிருந்து சிறிது காலம் விலகியிருந்தேன். நாயகி வாய்ப்பிற்காகக் காத்திருந்தேன்.

இந்த இடைவெளியில் எனது திறமையை நிரூபிக்கும்படியான, இணைய தொடர்களில் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். அதன்மூலம் தரமான கதாபாத்திரங்களிலும் நடித்தேன். எனது திறமையை கவனித்து இயக்குநர் தற்போது நாயகி வாய்ப்பை அளித்துள்ளது பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது" என்றார்.

நடிகை சஞ்சனா சாரதி

நடிகர் ஹரி பாஸ்கர் நாயகனாக நடிக்கும் 'நினைவோ ஒரு பறவை' தமிழ் படத்திலும் சஞ்சனா சாரதி நாயகியாக நடித்துவருகிறார். சஞ்சனா நாயகியாக நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது. பட வெளியீடு பற்றிய அறிவிப்பு, விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details