தமிழரசன் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.இவர்களோடு சுரேஷ்கோபு, ராதாரவி,யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி, சாயாசிங், மதுமிதா ஆகியோருடன் முக்கிய வேடத்தில் நடிகை சங்கீதாவும் நடிக்கவுள்ளார். சங்கீதா ‘உயிர்’, ‘பிதாமகன்’, ‘தனம்’ போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவராவர்.
2 ஆண்டுகளுக்குப் பின் ரீ-என்ட்ரி ஆன நடிகை சங்கீதா! - விஜய் ஆண்டனி
சென்னை: எஸ்.என்.எஸ். மூவீஸ் கெளசல்யா ராணி தயாரிப்பில் உருவாகி வரும் 'தமிழரசன்' படத்தில், 2 ஆண்டுகளுக்கு பின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சங்கீதா ஒப்பந்தமாகியுள்ளார்.
கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த 'நெருப்புடா' படத்தில் நெகடிவ் வேடத்தில் தூள் கிளப்பிய சங்கீதா, அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில், தற்போது தமிழரசன் படத்தின் மூலம் அவர் மீண்டும் நடிக்கவுள்ளார். இதுகுறித்து நடிகை சங்கீதா கூறும்போது, "எனக்கேற்ற கதாபாத்திரம் சரியாக இல்லாததால் நிறைய படங்களை நானே நிராகரித்து இருந்தேன். தற்போது நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அழைப்பு வந்தது. அந்த கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்ததால் உடனே ஒப்புக்கொண்டேன்.
இந்த படத்தில் என் கேரக்டர் மிகவும் பரபரப்பாக பேசப்படும். எனக்கு மிகப் பெரிய மருத்துவமனையை நடத்தும் டாக்டர் வேடம். இதில் என் கதாபாத்திரம் முக்கியத்துவம்", என்றார்.