'திமிரு பிடிச்சவன்' படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி, மீண்டும் காவலர் வேடமேற்று நடித்துவரும் படம்'தமிழரசன்'. இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கும் இப்படத்தை எஸ்.என்.எஸ். மூவிஸ் நிறுவனம் சார்பில் கௌசல்யா ராணி தயாரிக்கிறார்.
இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மேலும் ராதா ரவி, யோகி பாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், மாஸ்டர் பிரணவ் போன்றோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தில் சங்கீதாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். விக்ரம் பிரபுவின்'நெருப்புடா'படத்திற்கு பிறகு இரண்டு வருடங்கள் கழித்து சங்கீதா இதில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் திரைப்படத்தில் நடிகை சங்கீதா நடிக்க உள்ளார். இது குறித்து நடிகை சங்கீதா கூறுகையில், இதுவரை எனக்கேற்ற கதாபாத்திரம் சரியாக அமையாததால் பல படங்களில் நடிக்க மறுத்தததாகவும், இந்தப் படத்தில் நல்ல கதாபாத்திரம் அமைந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இப்படத்தில் மருத்துவர் வேடத்தில் நடிப்பதாக கூறினார்.