தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இளங்காத்து வீசுதே.. ஹேப்பி பர்த் டே சங்கீதா! - actress sangeetha celebrating birthday

தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் நடித்து வரும் சங்கீதா தனது பிறந்தநாளை இன்று கொண்டாடிவருகிறார்.

actress-sangeetha-celebrating-birthday
actress-sangeetha-celebrating-birthday

By

Published : Oct 21, 2021, 7:12 AM IST

Updated : Oct 21, 2021, 11:15 AM IST

சென்னை : நடிகையும், பாடகியுமான சங்கீதா கிரிஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

1978ஆம் ஆண்டு பிறந்த இவர் 90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரையிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்திவருகிறார். இவர், தனது 18 வயதில் பூஞ்சோலை என்ற திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.

அதன் பிறகு பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

சங்கீதா

குறிப்பாக காளை, மன்மதன் அம்பு, பிதாமகன் போன்ற படங்களில் இவரது நடிப்பு உச்சத்தில் இருந்தது. உயிர், பிதாமகன், தனம் போன்ற திரைப்படங்களில் நடித்ததையடுத்து ரசிகர்களிடத்தில் நன்கு பரிட்சயமானார். இவர் எ.ஆர்.ரகுமானுடனும் பணிபுரிந்திருக்கிறார்.

பிதாமகன் சங்கீதா

இவர் விக்ரம், சூர்யாவுடன் இணைந்து நடித்த பிதாமகன் திரைப்படம் தேசிய விருது பெற்றது. தற்போது கூட தெலுங்கில் டாப் நடிகர் மகேஷ்பாபு நடிக்கும் ஒரு புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.

இவர் 2009ஆம் ஆண்டு கிருஷ் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது சினிமா, குடும்பம் என இரண்டிலும் சிறப்பாக கவனித்துவருகிறார்.

சங்கீதா

இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் இவருக்கு திரைதுறையினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : புன்னகை இளவரசி மஞ்சுஷா ராம்பள்ளியின் புகைப்படத்தொகுப்பு

Last Updated : Oct 21, 2021, 11:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details