சென்னை: ஹன்சிகா நடித்து வரும் 'மஹா' படத்தில் மற்றொரு ஹீரோயினாக சனம் ஷெட்டி இணைந்துள்ளார்.
திரில்லர் பாணியல் தயாராகி வரும் 'மஹா', ஹன்சிகாவின் 50வது படம். இதனை யுஆர் ஜமீல் இயக்குகிறார். படத்துக்கு இசை ஜிப்ரான். இது அவருக்கு 25வது படமாகும்.
இதையடுத்து 'மஹா' படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்பு - ஹன்சிகா ஆகியோர் காதலித்து பின்னர் சில மாதங்களிலேயே பிரேக் ஆப் ஆகினர். இதையடுத்து காதல் முறிவுக்கு பின்னர் இவர்கள் இருவரும் இந்தப் படத்தில் மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
'மஹா' படத்தில் சிம்பு - ஹன்சிகா இந்த நிலையில், படத்தில் மற்றொரு ஹீரோயினாக நடிகையும், மிஸ் செளத் இந்தியா டைட்டில் வென் சனம் ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், என் கனவு நிஜமாகியுள்ளது. எனக்கு மிகவும் பிடித்த நடிகர், மனிதர் சிம்பு மற்றும் க்யூட்டான ஹன்சிகாவுடன் இணைந்து பணியாற்றவுள்ளேன். படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு அளித்த இயக்குநர் ஜமீல் மற்றும் தயாரிப்பாளர் மதியழகன் ஆகியோருக்கு நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகை ஹன்சிகா சாமியார் போல் காவி உடை அணிந்து சுருட்டு பிடித்தவாறு வாயிலிருந்து புகை விடுவது போல் இருந்த புகைப்படம் சர்ச்சையை கிளப்பியது.
இதைத்தொடர்ந்து ரத்தம் முழுக்க நிரம்பியிருக்கும் பாத் டப்பில் கையில் துப்பாக்கியுடன் ஹன்சிகா இருப்பது போன்ற மற்றொரு போஸ்டர் மீதும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.