தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு கரோனா! - நடிகை சம்யுக்தா ஹெக்டே படங்கள்

சென்னை: ஜெயம் ரவியின் 'கோமாளி' பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

samyuktha
samyuktha

By

Published : May 21, 2021, 3:18 PM IST

இந்தியாவில் தற்போது கரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிதீவிரமாகி வருகிறது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

அந்த வகையில், தமிழில் 'வாட்ச்மேன்', 'கோமாளி', 'பப்பி' உள்ளிட்டப் படங்களில் நடித்த சம்யுக்தா ஹெக்டேவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, " நண்பர்களே நீங்கள் எல்லோரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது நான் வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அனைத்து நெறிமுறைகளையும் கடைப்பிடித்து வருகிறேன். உங்களை கவனித்துக் கொள்ளுங்கள். எனது பெற்றோர் நன்றாக குணமடைந்து வருகிறார்கள். அவர்கள் ஆரோக்கியத்தோடு திரும்பியதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details