தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நான் கருவைக் கலைத்தேனா? - சமந்தா சர்ச்சையும்.. ஆதரவும்... - சமந்தா விவாகரத்து

நடிகை சமந்தா தன்னைப் பற்றி, அவதூறு பரப்பி வருபவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

சமந்தா
சமந்தா

By

Published : Oct 8, 2021, 5:57 PM IST

Updated : Oct 9, 2021, 3:52 PM IST

சமந்தா - நாக சைதன்யா இருவரும் 2017ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். பிறகு படங்களில் பிஸியாக இருவரும் நடித்துவந்தனர்.

கடந்த சில வாரங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதுகுறித்த எந்தத் தகவலையும் இருவரும் வெளியே சொல்லாமல் இருந்தனர்.

பின்னர் அக்டோபர் 2ஆம் தேதி இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளங்களில் அறிவித்தனர்.

இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து பலரும் இதற்கு சமந்தா தான் காரணம். அவர் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, குடும்பத்தைக் கண்டு கொள்ளவில்லை என சமூக வலைதளங்களில் வசைப்பாடினர்.

இந்நிலையில் தொடர்ந்து தன்னைப் பற்றி அவதூறு பரப்பி வருபவர்களுக்கு சமந்தா பதிலடி கொடுக்கும் விதமாகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமந்தா வெளியிட்ட பதிவு

அதில், "நாங்கள் விவாகரத்து செய்து கொண்டதற்கு ஏகப்பட்ட வதந்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. எனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருக்கிறது. குழந்தை வேண்டாம் என்று கருவை கலைத்ததாகவும் வதந்திகள் வருகின்றன.

இவை அனைத்தும் தவறான வதந்திகள்.

விவாகரத்து என்பது மிகுந்த வலியைக் கொடுக்கும். அதிலிருந்து நான் வெளியேற எனக்கு இன்னும் அவகாசம் தேவை. எவ்வளவு சொன்னாலும், என் மீது இந்த தாக்குதல்கள் தொடரும்.

அதை இனிமேலும் நான் அனுமதிக்கமாட்டேன். இவர்கள் இதுபோன்று சொல்வது எதுவும் என்னை உடைக்காது" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே நடிகை ரகுல் ப்ரீத் சிங், சமந்தா பதிவுகுறித்து உறுதியோடு இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நடிகை மஞ்சிமா மோகன் ‘உறுதியோடு இருங்கள் சமந்தா” என்றுக்கூறி ரீட்விட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: ஏன் ஆண்களை கேள்வி கேட்பதில்லை? - சமந்தா

Last Updated : Oct 9, 2021, 3:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details