தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 15, 2020, 1:37 PM IST

ETV Bharat / sitara

வீட்டிலேயே காய்கறி செடிகள் வளர்க்கும் சமந்தா!

நடிகை சமந்தா காய்கறி செடிகள் வளர்த்து வருவது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Samantha
Samantha

ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் நடிகை சமந்தா தனது பெரும்பாலான நேரத்தை தனது கணவர் நாக சைதன்யா மற்றும் அவரது வளர்ப்பு நாயுடன் செலவு செய்து வருகிறார்.

இதற்கிடையில் நடிகை சமந்தா தனது வீட்டின் மொட்டை மாடியில் காய்கறி செடிகளை வளர்த்து வருகிறார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "மக்கள் என்னிடம் உங்கள் பொழுதுபோக்கு என்ன? என்று கேட்பார்கள். அதற்கு நான் நடிப்பது என்று கூறுவேன். அதற்கு அவர்கள் அது உங்கள் வேலை. பொழுதுபோக்கு என்ன? என்பார்கள். அதற்கு பதிலளிக்க முடியாமல் இருந்தேன்.

ஆனால் தற்போது இறுதியாக என்னுடைய பொழுதுபோக்கு என்ன என்பதை கண்டு பிடித்துவிட்டேன். வீட்டிலேயே காய்கறி செடிகளை வளர்ப்பது தான் என்னுடைய பொழுதுபோக்கு" என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details