உலகம் முழுவதும் நேற்று (பிப். 14) காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர்கள் அனைவரும் இந்த நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடினர். திரை பிரபலங்கள் பலரும் தங்களது காதலி, காதல் இணையருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அன்பைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிலையில், நடிகை சாக்ஷி அகர்வால் வித்தியாசமான முறையில் காதலர் தினத்தைக் கொண்டாடி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்தபோதும், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். இவர் திரைக்கு வர இருக்கும் டெடி, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ஆதரவற்ற குழந்தைகளுடன் காதலர் தினம் கொண்டாட்டம் சமீபத்தில் வெளியான குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கிய லோகம் கதையில் சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார். போராளியாக புரவி படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில், காதலர் தினத்தையொட்டி ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, பரிசுப் பொருள்கள் வழங்கி தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அன்பை வெளிப்படுத்துவதே காதலர் தினம் இது குறித்து அவர் கூறியதாவது, "காதல் எப்படி வேண்டுமானாலும் வரலாம். அதற்கு எல்லைகளோ, விதிகளோ இல்லை. என்னைப் பொறுத்தவரை காதலர் தினம் என்பது அன்பை வெளிப்படுத்துவது. இந்த ஆண்டு காதலர் தினத்தை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடியது மகிழ்ச்சியாக இருந்தது" என்றார்.
இதையும் படிங்க: பிரபாஸின் ராதே ஷியாம் ரிலீஸ் எப்போது?