தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

யானை குளியல் போடும் 'சாக்‌ஷி அகர்வால்' - சாக்‌ஷி அகர்வால்

புகைப்பட ஷுட்டில் பங்கேற்ற பிக்பாஸ் புகழ் நடிகை சாக்‌ஷி அகர்வால், யானை மீது அமர்ந்தபடி குளியல் போடும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

sakshi agarwal
சாக்‌ஷி அகர்வால்

By

Published : Nov 26, 2019, 3:14 PM IST

தமிழ் சினிமாவில் திருட்டு விசிடி, க க க போ, காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். தனியார் தொலைக்காட்சி நடத்திய 'பிக்பாஸ் 3' சீசனில் போட்டியாளராக பங்கேற்ற இவர் அதன் மூலம் பெயர்பெற்றார்.

தற்போது ராய் லட்சுமி நடிக்கும் சின்ரெல்லா, திரைக்கு வரவிருக்கும் ஆயிரம் ஜென்மங்கள், டெடி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இதனிடையே தற்போது காலண்டர் விளம்பரத்திற்காக நடைபெற்ற புகைப்பட ஷுட் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது சாக்‌ஷி யானை மீது அமர்ந்து குளியல் போட்டபடி, எடுக்கப்பட்டிருக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், 'யானை ராஜா மீது அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களில், வித்தியாசமான அனுபவத்தை உணர்ந்தேன்' என குறிப்பிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க...

80'ஸ் நட்சத்திரங்களின் ரீயூனியன்: வருத்தம் தெரிவித்த 'பிரதாப் போத்தன்'

ABOUT THE AUTHOR

...view details