'பிகில்' படத்தில் நடித்தபின்பு நல்ல வரவேற்பைப் பெற்றார் நடிகர் யோகி பாபு. இந்நிலையில் நடிகை ஒருவருடன் யோகி பாபுவுக்கு திருமணம் நடந்து விட்டதாக, சில நாட்களாக சமூக வலைதளங்களில் வதந்திகள் கிளம்பின.
இதைத்தொடர்ந்து வதந்திகளுக்கு தனது சமூக வலைதளத்தில் மறுப்பு தெரிவித்திருந்தார், யோகிபாபு.
இந்நிலையில் இது குறித்து காணொலி ஒன்றை நடிகை சபீதா ராய் வெளியிட்டுள்ளார். அதில், "யோகி பாபுவுக்கும் எனக்கும் சக நடிகை என்பதைத் தாண்டி; எனக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. யோகி பாபு நல்ல மனிதர், எனக்கு நல்ல நண்பர் அவ்வளவு தான்" என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: கங்கனாவைக் காப்பாற்ற வந்த சகோதரி!