'நவரசா' ஆந்தாலஜி திரைப்படத்தின் ஒரு பகுதியாக, நடிகர் அரவிந்த் சுவாமி இயக்கியுள்ள படம் 'ரௌத்திரம்'.
இதில் அன்புக்கரசி வேடத்தில் நடிகை ரித்விகா நடித்துள்ளார். கோபத்தின் உணர்ச்சியை இக்கதை சித்தரிக்கிறது.
மிகப்பெருமையான தருணம்
இதுகுறித்து நடிகை ரித்விகா கூறியதாவது, "அரவிந்த் சுவாமி போன்ற புகழ்பெற்ற நடிகருடன் பணிபுரிவது, என் வாழ்வில் பெருமையான தருணம்.
ஒரு நடிகராக இல்லாமல் இயக்குநராக அவரை அருகிலிருந்து பார்த்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது.
சினிமா குறித்து நுணுக்கம்
ஒரு காட்சியை உருவாக்குவதில் அனைத்து தொழில் நுட்ப சாத்தியங்களையும் பயன்படுத்துவதில், தேர்ந்தவராக இருந்தார்.
சினிமா குறித்து அரவிந்த் சுவாமியின் நுணுக்கமான அறிவும், அதை உருவாக்குவதில் அவர் பயன்படுத்திய முறையும் அபாரமானது.
இப்படத்திற்காகக் காட்சிகள், வசனங்களை ஒத்திகை செய்யும் ஆன்லைன் கூட்டங்களில் கலந்துகொண்டது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது" என்றார்.
இதையும் படிங்க:‘டாணாக்காரன்’ விக்ரம் பிரபு சினிமா கேரியரில் மிக முக்கிய இடத்தை பிடிக்கும் - இயக்குநர் தமிழ்