தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தேவசேனா' கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் காட்டிய 'சிங்கப் பெண்' - பிகில் பட நடிகை

சென்னை : நடிகை ரெபா மோனிகா ஜான் தேவசேனா கதாபாத்திரத்தில் நடிக்க தான் ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ரெபா மோனிகா ஜான்
ரெபா மோனிகா ஜான்

By

Published : Aug 24, 2020, 8:42 PM IST

இயக்குநர் ராஜமெளலியின் பிரம்மாண்ட இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பாகுபலி'. 2015ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 'பாகுபலி 2', 2017ஆம் ஆண்டு வெளிவந்து உலக அளவில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றது.

'பாகுபலி' படத்தில் 'தேவசேனா' கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இந்தக் கதாபாத்திரத்தில் இவரைத் தவிர வேறு யாரும் அந்த அளவுக்கு கச்சிதமாகப் பொருந்த மாட்டார்கள் என ரசிகர்கள் பேசும் அளவிற்கு அனுஷ்கா தனது முழு நடிப்புத்திறமையும் படத்தில் வெளிக் கொண்டு வந்திருந்தார்.

இந்த நிலையில் 'பிகில்' படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகையான ரெபா மோனிகா ஜான், தனது ட்விட்டர் பக்கத்தில், புதிய போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு, ”பாகுபலி 3இல் தேவசேனா கதாபாத்திரத்தில் நான் நடிக்கலாமா?” என ரசிகர்களிடையே கேள்வி எழுப்பி உள்ளார். இவரது இந்தப் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சிலாகித்து பகிர்ந்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details