'சலோ' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான ராஷ்மிகா மந்தானா, 'கீதா கோவிந்தம்' படத்தின் மூலம் பிரபலமானார். இப்படத்தின் வெற்றி, ராஷ்மிகா மந்தானாவிற்கு தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகி என்ற அந்தஸ்தை தந்துள்ளது. மேலும், 'இன்கேம் இன்கேம்' என்ற பாடல் மற்றும் இந்த படத்தில் இடம்பெற்ற காட்சிகள் தென்னிந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 'கீதா கோவிந்தம்' படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் 'டியர் காம்ரேட்' படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில்இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், கார்த்திக்குடன் சேர்ந்து தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.