தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

உணவுக்கு வழியில்லாமல் அவதிப்படும் நடிகை ரங்கம்மாள் பாட்டி - Rangammal interview

வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவை காட்சியில் நடித்த ரங்கம்மாள் பாட்டி அடுத்தவேலை உணவுக்கே வழியில்லாமல் அவதிப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

ரங்கம்மாள் பாட்டி
ரங்கம்மாள் பாட்டி

By

Published : Jan 8, 2022, 9:22 PM IST

Updated : Jan 11, 2022, 10:51 PM IST

நகைச்சுவை நடிகர் வடிவேல் நடித்த படத்தில், 'டேய் மாடசாமி போறது தான் போற அந்த நாயை ஸூன்னு விரட்டிட்டு போ' என்ற டயலாக் இன்றுவரை பிரபலமாக இருந்துவருகிறது. இந்த நகைச்சுவை நமக்கு இன்றுவரை நினைவில் இருப்பதற்கு காரணம் அந்தக் காட்சியில் வரும் ரங்கம்மாள் பாட்டிதான். வடிவேலுவை வைத்து அந்தப் பாட்டி செய்யும் ரகளைகளை இன்று நினைத்தால்கூட சிரிப்பு வரும்.

இப்படி நம்மை மகிழ்வித்த பாட்டி ரங்கம்மாள் தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை இந்தச் செய்தியில் காண்போம். கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள தெலுங்குபாளையம் கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் ரங்கம்மாள். எம்ஜிஆர் நடிப்பில் வெளியான விவசாயி படத்தில் தேவர் மூலம் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து சிவாஜி, கமல், ரஜினிகாந்த் எனத் தற்போது உள்ள அஜித், விஜய், விஷால், உதயநிதி ஸ்டாலின் வரை அனைவருடனும் நடித்துவந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக சினிமா வாய்ப்புகள் ஏதுவும் இல்லாத வராத நிலையில் வயோதிகம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து சென்னையில் ஒரு மாத காலம் சிகிச்சையிலிருந்த அவர் தற்போது சொந்த ஊரான தெலுங்குபாளையத்துக்குத் திரும்பியுள்ளார்.

ரங்கம்மாள் பாட்டி

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்தாலும் தற்போதுவரை பெரிதாக ஏதும் சம்பாதிக்காத அவர் வீடு ஏதுவுமின்றி வாடகைக்குக் கூரை வீட்டை ஒன்றை எடுத்து தங்கியுள்ளார். அவரை அவரது சகோதரிகள், மகன் கவனித்துவருகின்றனர். உடல் நலக்குறைவால் படங்கள் பாதியிலேயே நிற்பதால் தனக்குத் திரைத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள், நடிகர் சங்கத்தினர் உதவ வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.

சினிமா துறையில் தன்னுடன் நடிக்காத நடிகர்களே இல்லை. போதுமான அளவு சினிமா துறையில் பெயர் எடுத்துள்ளதாகவும், கடைசிக் காலத்தை இங்கேயே கழித்துவிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தங்குவதற்கு ஒரு வீடு, சாப்பிடுவதற்கு உணவு கிடைத்தால் போதும் அதற்கு யாராவது ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள்விடுக்கிறார் ரங்கம்மாள் பாட்டி.

ரங்கம்மாள் பாட்டி

அவரின் மகன் ராஜகோபால் கூறுகையில், "எனது தாயுடன் சென்னையில் வாடகை வீட்டில் வசித்துவந்தோம். சினிமா வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் வறுமையின் காரணமாகச் சொந்த ஊருக்கு வந்துவிட்டோம்.

உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் எனது தாய் ரங்கம்மாள் இங்கேயே வசிக்க முடிவுசெய்துள்ளார். எனது தாய்க்கும், சினிமா உலகில் வறுமையில் வாடும் சக நடிகர்களுக்கும் நடிகர் சங்கம் உதவ முன்வர வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:சிம்புவிற்கு கௌரவ டாக்டர் பட்டம்...!

Last Updated : Jan 11, 2022, 10:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details