தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தளபதி 64 அப்டேட்: முக்கிய ரோலில் நடிக்கும் ரம்யா! - ரம்யா சுப்ரமணியன் தளபதி 64

'தளபதி 64' படத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளர் ரம்யா சுப்ரமணியன் நடிக்க உள்ளார்.

ramya

By

Published : Nov 9, 2019, 1:09 PM IST

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் 'பிகில்'. விஜய் தந்தை - மகனாக இரட்டை வேடங்களில் நடித்த இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து விஜய் 'கைதி' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

பிகில் இசை வெளியிட்டு விழாவில் ரம்யா - விஜய்

இன்னும் பெயர் சூட்டப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 64' எனப் பெயர் வைத்துள்ளனர். இதில் மாளவிகா மோகன், விஜய்சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. அதில் விஜய் கலந்து கொண்டார். இதனையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதிலும் விஜய் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இவருடன் மாளவிகா மோகனும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.

ரம்யா ட்வீட்

தற்போது தொலைக்காட்சி தொகுப்பாளர் ரம்யா சுப்ரமணியன் தளபதி 64 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்தத் தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க:
அடுத்து 'லைலா சன்னி ' - ஆடப்போவது எங்கயா இருக்கும்...?

ABOUT THE AUTHOR

...view details