தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இயக்குநர் பிரியதர்ஷனுடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம் - நடிகை ரம்யா நம்பீசன் - நவரசா திரைப்படம் வெளியாகும் தேதி

சென்னை: "நவரசா" ஆந்தாலஜி படத்தில் இயக்குநர் பிரியதர்ஷனுடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம் என நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.

ramya
ramya

By

Published : Jul 29, 2021, 1:41 PM IST

ஒன்பது முன்னணி இயக்குநர்கள், ஒன்பது முன்னணி ஒளிப்பதிவாளர்கள், ஒன்பது முன்னணி இசையமைப்பாளர்கள் இணைந்து நவரசங்களை மையமாக வைத்து 'நவரசா' என்னும் ஆந்தாலஜி படத்தை இயக்கியுள்ளனர்.

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள இப்படத்தை மணிரத்னம், ஜெயேந்திரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். கரோனா பொது முடக்கம் காரணமாகத் திரையுலகில் ஏற்பட்ட பொருளாதார இழப்பிற்கு உதவும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாகிறது.

கோபம், சிரிப்பு, வெறுப்பு உள்ளிட்ட 9 ரசங்களை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ள 9 குறும்படங்களில் முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த், யோகிபாபு, நடிகைகள் பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, புகழ்பெற்ற நடிகையாக வலம் வரும் நடிகை ரம்யா நம்பீசன், 'நவரசா'வில், இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கிய குறும்படத்தில் நடித்துள்ளார்.

நவரசா படத்தில் ரம்யா நம்பீசன் பட போஸ்டர்

இதில் ரம்யா நம்பீசன் லக்ஷ்மி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்தும், இயக்குநர் பிரியதர்ஷனுடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும் பகிர்ந்துள்ளார்.

அதில், எனது கதாபாத்திரத்தில் சிறு வயது தோற்றத்திலும், முதிய வயது தோற்றத்திலும் நானே நடிப்பதாக, படைப்பாளிகள் என்னிடம் கூறியபோது, எனக்கு சற்று குழப்பமாக இருந்தது.

முதிய வயது தோற்றத்தை, என்னால் சரியாக செய்ய முடியுமா எனத் தயங்கினேன். இயக்குநர் பிரியதர்ஷன் ஒவ்வொரு காட்சியையும் மிகப் பொறுமையாக சொல்லிக்கொடுத்து, படப்பிடிப்பில் மிக ஆதரவாக பார்த்துக்கொண்டார்.

அவரால் தான் இப்படத்தில் நடிப்பது எளிமையானதாக இருந்தது. மிகப்பெரும் ஆளுமையான இயக்குநர் பிரியதர்ஷன் அவர்களுடன் பணியாற்றியது, மறக்க முடியாத, மிகச்சிறந்த அனுபவம் என்றார்.

இதையும் படிங்க: 'கிடார் கம்பி மேலே நின்று' மனம் திறந்த கௌதம் மேனன்!

ABOUT THE AUTHOR

...view details