யுவன் ஷங்கர் ராஜா இசையில் 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்துக்காக ஃபோக் பாடலைப் பாடியுள்ளார் நடிகை ரம்யா நம்பீசன்.
இந்தப் படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார். நடிகர் ரியோ ராஜ் கதாநாயகனாகவும், ரம்யா நம்பீசன் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். ரேகா, ஆடுகளம் நரேன், முனீஷ்காந்த், ரோபோ சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
நகைச்சுவை படமாக உருவாகி வரும் 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்தின் படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து படத்துக்காக ஃபோக் பாடல் ஒன்றை யுவன் இசையில் ரம்யா நம்பீசன் பாடியுள்ளார்.
Ramya nambeesan sings folk song in yuvan music இந்தப் பாடலை பாரதியாரின் கொள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி எழுதியுள்ளார். சென்னை நகரின் சில முக்கியமான இடங்களில் இப்பாடலுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வரும் மார்ச் மாதம் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.