சென்னை:சித்தி 2 தொடரிலிருந்து நடிகை ராதிகா சரத்குமார் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டிருப்பதாவது,' 'சித்தி 2' மெகா தொடரிலிருந்து விலகுவது மகிழ்ச்சி மற்றும் கவலை என இரண்டும் கலந்த மனநிலையைத் தந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கடின உழைப்பும், சிறந்த பங்களிப்பையும் அளித்தேன்.
சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களிடமிருந்து விடைபெறுவது வருத்தமளிக்கிறது. இத்தொடர் தொடர்ந்து நடைபெறும். கவின், வெண்பா, யாழினி ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.