தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 17, 2019, 12:26 PM IST

Updated : May 17, 2019, 7:26 PM IST

ETV Bharat / sitara

தவறே செய்யாமல் மன்னிப்பு கோரிய ராஷி கண்ணா!

அயோக்கியா படத்தில் பணியாற்றிய பின்னணி குரல் கலைஞரின் பெயர் குறிப்பிடாததற்கு, அவரிடம் நடிகை ராஷி கண்ணா மன்னிப்பு கேட்டுள்ளார்.

ராஷி கண்ணா

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் 'அயோக்கியா' படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான 'டெம்பர்' படத்தின் ரீமேக்கான இப்படத்தில் ராஷி கண்ணா விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், பூஜா உள்ளிட்ட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.

இப்படத்தில் நடிகை ராஷி கண்ணாவிற்கு டப்பிங் பேசியிருந்த நடிகை ரவீனா, தன் பெயர் படத்தில் இடம்பெறாதது குறித்து ட்விட்டரில் வருத்தம் தெரிவித்திருந்தார்.

ராஷி கண்ணா ட்விட்

இதைப்பார்த்த ராஷி கண்ணா "உங்களது பெயர் படத்தில் இடம் பெறாததற்கு என்னை மன்னித்து விடுங்கள்" என்று அதற்கு பதில் அளித்துள்ளார். இவ்வாறு படக்குழு செய்த தவறுக்காக, நடிகை ராஷி கண்ணா ரவீனாவிடம் மன்னிப்பு கேட்டிருப்பது, அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

Last Updated : May 17, 2019, 7:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details