கன்னட மொழியில் 2019ஆம் ஆண்டு வெளியான 'Ondh Kathe Hella' (ஒன்து கதே ஹெல்லா) என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இதனையடுத்து அதே ஆண்டு தெலுங்கில் கேங் லீடர் (Gang Leader) என்ற படத்திலும் நடித்திருந்தார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான, 'டாக்டர்' திரைப்படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழில் இவர் நாயகியாக அறிமுகமாகினார்.
கேங் லீடர் படத்தில் பிரியங்கா மோகனின் நடிப்பைப் பார்த்துக் கவர்ந்ததால், 'டாக்டர்' பட இயக்குநர் நெல்சன் தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா பாடலில் இடம்பெற்றுள்ள உள்ள ’மெழுகு டாலின்’ என்ற சொல் உண்மையில் அவருக்கு எழுதிய வரிகள் போலவே இடம்பெற்றிருக்கும்.