பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்துவரும் பிரியங்கா சோப்ரா, பாப் பாடகர் நிக் ஜோனஸை 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். டிசம்பர் மாதம் 2, 3 ஆகிய தேதிகளில் இந்து, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு இருவரும் தங்களது வேலைகளில் பிஸியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெளியே சுற்றிவருகின்றனர். மேலும் இருவரும் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணத்திற்குப் பிறகு கணவரின் பெயரான ஜோனஸை சேர்த்திருந்தார்.
இந்நிலையில் பிரியங்கா சோப்ரா திடீரென தனது பெயருக்குப் பின்னால் இருந்த ஜோனஸின் பெயரை நீக்கியுள்ளார். இதனால் இருவரும் பிரிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. இருப்பினும் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.