பிரபல செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளரான பிரியா பவானி சங்கர், 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'மேயாத மான்' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார். அப்படத்தில் இவரது நடிப்பு, ஹோம்லியான லுக் அனைவரையும் கவர்ந்தது. இப்படத்தில் இடம்பெற்ற மது என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இதனைத் தொடர்ந்து 'கடைக்குட்டி சிங்கம்' எனும் படத்தில் கார்த்தியின் மாமன் மகளாக நடித்திருந்தார்.
'மான்ஸ்டர் வெற்றி விழாவில் பங்கேற்க முடியல..!' - பிரியா வருத்தம் - priya bavani sangar
'மான்ஸ்டர்' பட வெற்றி விழாவில் கலந்துக் கொள்ள முடியாத சோகத்தை நடிகை பிரியா பவானி சங்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நல்ல கதைகளுக்காக காத்திருந்து நடிப்பை வெளிப்படுத்தும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்திருந்தார். கடந்த வாரம் வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் பிரியா பவானி சங்கர் நல்ல வேடம் ஏற்று நடித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழாவை மான்ஸ்டர் படக்குழுவினர் சமீபத்தில் கொண்டாடினர். ஆனால் பிரியா பவானி சங்கர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
இது குறித்து பிரியா பவானி சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அற்புதமான நாள், இந்தக் வெற்றிக் கொண்டாட்டத்தில் என்னால் கலந்துக் கொள்ள முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.