திரையுலகில் உள்ள நடிகைகள் பலரும் தங்களது உடலை கச்சிதமாக வைத்துக்கொள்வதில் ஆர்வமுடையவர்கள். இதற்காக படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது என்று எப்போதும் தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் நடிகை பிரணிதா, 108 முறை சூரிய நமஸ்காரம் செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், '108 சூரிய நமஸ்காரம் செய்துள்ளேன். ரத சப்தமி என்பது பருவத்தை வசந்த காலத்திற்கு மாற்றுவதையும் அறுவடை பருவத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. 108 சூர்ய நமஸ்காரம் செய்வது முக்கியத்துவம் வாய்ந்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.