இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கரோனா இரண்டாவது அலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சமீபகாலமாக திரைப்பிரபலங்கள் பலர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு, அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பூஜா ஹெக்டே இந்நிலையில், இன்று (ஜூன் 22) நடிகை பூஜா ஹெக்டே கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தடுப்பூசி எடுக்கும்போது பூஜா ஹெக்டே தனது அம்மாவின் கையை இறுகப் பற்றிக்கொண்டு சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படம் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.
விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஆர்யா