தெலுங்கு சினிமாவில் பிரயாணம் படத்தின் மூலம் அறிமுகமானவர் பாயல் கோஷ். இதனைத்தொடர்ந்து தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் தேரோடும் வீதியிலேயே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் எந்த தமிழ் பட வாய்ப்புகளும் வராததால் மீண்டும் இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
லாக்டவுன் நேரத்தில் மலேரியாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார். சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பாயல் கோஷ், அண்மையில் தென்னிந்திய திரையுலகில் பெண்களை தவறாக பேசுவதைக் கண்டித்து ட்விட் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, "தென்னிந்திய சினிமாவில் நடிக்கும் பெண்களை சிலர் தவறாக பேசுவதை நான் பார்க்கிறேன். மிகவும் பரிதாபமாக இருக்கிறது.