தமிழில், விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஓவியா. அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முலம் மிகவும் பிரபலமானர்.
'பிளாக் காபி'க்கு விளம்பரமாடலாகும் ஓவியா - பிளாக் காபி
நடிகை ஓவியா தான் நடிக்க உள்ள அடுத்த படம் குறித்த தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

இதன்பின் அவர் நடித்த 90 எம்.எல். படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பு இல்லாமல் போனது. இப்படத்தை தொடர்ந்து வெளியான களவாணி 2 படமும், களவாணியை போன்று வெற்றி பெறவில்லை. இதனால் ஓவியா சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். இந்நிலையில், தற்போது மலையாள திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
இயக்குநர் பாபுராஜ் இயக்கும் பிளாக் காபி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் பற்றி அவர் கூறுகையிவல், இது ஒரு காதல் கதை. இதில் நான் ஒரு விளம்பர மாடலாக நடிக்கிறேன். தனது துறையில் முத்திரை பதிக்க மேற்கொள்ளும் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் உறவுச் சிக்கல்கள் குறித்தும் படம் பேசும், என்றார்.