மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிவேதா தாமஸ், நவீன சரஸ்வதி சபதம் படம் மூலம் நாயகியாக அறிமுகமினார்.
இதனையடுத்து விஜய்யுடன் ஜில்லா, பாபநாசம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி தர்பார் படத்தில் ரஜினியின் மகள் பாத்திரத்திலும் சிறந்த நடிப்பை வெளிக்காட்டினார்.
இந்நிலையில் நடிகை நிவேதா தாமஸ் ஆப்பிரிக்காவின் உயர்ந்த மலையான கிளிமஞ்சாரோ சிகரத்திற்குச் சென்றுள்ளார். 5.895 அடி கொண்ட இந்த மலை ஏறுவதற்காக அவர் சுமார் 6 மாதங்கள் பயிற்சி எடுத்து முறையாகச் சென்றுள்ளார்.