தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நடிகை நிவேதா தாமஸுக்குக் கரோனா! - நிவேதா தாமஸ் படங்கள்

சென்னை: நடிகை நிவேதா தாமஸுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Nivetha
Nivetha

By

Published : Apr 3, 2021, 7:33 PM IST

மலையாள சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான 'குருவி' படத்தில் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

அதன்பின் ஜில்லா, பாபநாசம், தர்பார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நிவேதா தாமஸ் நடித்துள்ளார். இவர் தற்போது தெலுங்கில் 'பிங்க்' ரீமேக்கான 'வக்கீல் சாப்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நிவேதா தாமஸ் ட்விட்டர் வாயிலாக அறிவித்துள்ளார்.

அதில், "கரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டேன். பரிசோதனை முடிவில் எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நான் தனிமைப்படுத்திக்கொண்டேன். உரிய சிகிச்சைப் பெற்று முழுமையாக கரோனாவில் இருந்து குணமடைவேன் என நம்புகிறேன். என்னை கவனமுடன் பார்த்துக்கொள்ளும் எனது மருத்துவக் குழுவினருக்கு நன்றி.

அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். முகக்கவசம் அணியுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து ரசிகர்கள் நிவேதா தாமஸ் விரைவில் குணமடைந்து வர வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details