தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மீண்டும் போலீசாக மாறுகிறார் நிவேதா! - ராம் பொத்தினேனி

'தடம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Actress Nivetha Pethuraj to act in 'Thadam' remake

By

Published : Oct 21, 2019, 6:03 PM IST

'ஒரு நாள் கூத்து' படத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் நிவேதா பெத்துராஜ்.

இவர் தற்போது தெலுங்கு படங்களில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். தமிழில் 'டிக் டிக் டிக்' படத்தில் பாதுகாப்புப் படை உயர் அலுவலராக நடித்திருந்த நிவேதா பெத்துராஜ், அதைத்தொடர்ந்து 'திமிரு புடிச்சவன்' படத்தில் காக்கிச்சட்டை அணிந்த பெண் காவலராக நடித்திருந்தார்.

தமிழில் ஹிட் அடித்த 'தடம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ள நிவேதா, தமிழில் வித்யா ஏற்றிருந்து காவலர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வித்யா

'தடம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கை கிஷோர் திருமலா இயக்குகிறார். இந்தப் படத்தில் சமீபத்தில் 'ஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் மூலம் முன்னணி ஹீரோவாக மாறியுள்ள ராம் பொத்தினேனி நடிக்கிறார். தமிழில் ஹிட்டானது போலவே தெலுங்கிலும் இந்தப் படம் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:#PressFreedom சுதந்திர கூக்குரல்: ஆஸ்திரேலிய பத்திரிகைகளை ஆக்கிரமித்த வெற்றிடம்!

ABOUT THE AUTHOR

...view details