தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கேரளா நடிகை திடீர் கைது- பின்னணி என்ன? - latest cinema news

கேரளாவில் சாமி ஊர்வலத்திற்கு பயன்படுத்தும் படகில் புகைப்படம் எடுத்த மலையாள நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

actress Nimisha
actress Nimisha

By

Published : Sep 14, 2021, 2:23 PM IST

கேரள மாநிலத்திலுள்ள பல கோயில்களுக்குச் சொந்தமாக நீண்ட, பாம்பு வடிவிலான படகுகள் உள்ளன. இந்த படகுகளைக் கேரள மக்கள் புனிதமாகக் கருதுகின்றனர்.

இந்நிலையில் பிரபல மலையாள நடிகை நிமிஷா பிஜோ, பம்பை நதியில் சாமி ஊர்வலத்திற்கு பயன்படுத்தப்படும் படகில் ஏறி புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் சாமி வைக்கும் படகில் செருப்பு காலுடன் நின்றுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சாமி வைக்கும் படகில் செருப்பு அணிந்து புகைப்படம் எடுத்தது தொடர்பாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில், நிமிஷாவை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது புனிதமான படகு என தெரியாது என்றும், தெரியாமல் இந்த தவறைச் செய்து விட்டதாகவும் நிமிஷா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : கவினின் லிஃப்ட் பட வெளியீட்டில் ஏற்பட்ட புதிய சிக்கல்

ABOUT THE AUTHOR

...view details