2014ஆம் ஆண்டு மலையாள படத்தில் அறிமுகமாகி தனது திரைப்பயணத்தை தொடங்கிய நிக்கி கல்ராணி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்துவருகிறார். பொதுவாக ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் திரைத்துறை பிரபலங்கள் சந்திக்கும் முக்கியமான கேள்வி ஒன்றுதான், எப்பங்க கல்யாணம்? இந்தக் கேள்வி கேட்பவரை வாயடைக்க வைக்க, ஒன்று காதலிப்பவர் பற்றி கூற வேண்டும் அல்லது கல்யாணம் பற்றிய தனது அபிப்ராயத்தை தெரிவிக்க வேண்டும். நிக்கி கல்ராணி தனது காதலர் பற்றி கூறியுள்ளார்.
ஒமர் லுலு இயக்கும் ‘தமாகா’ படத்தில் முன்னணி கதாபாத்திரம் ஏற்றுள்ள நிக்கி கல்ராணி, அதன் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் உங்கள் காதல் வாழ்க்கை பற்றி கூறுங்கள் என கேட்டதற்கு, சென்னையை சேர்ந்து ஒருவரை சீரியஸாக காதலித்து வருகிறேன். ஆனால் அவர் யார் என்பதை தற்போதைக்கு சொல்ல முடியாது என தெரிவித்திருக்கிறார்.