தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நடிகை நிக்கி கல்ராணிக்கு கரோனா தொற்று! - நிக்கி கல்ராணி கரோனா

சென்னை: தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நடிகை நிக்கி கல்ராணி தெரிவித்துள்ளார்.

நிக்கி கல்ராணி
நிக்கி கல்ராணி

By

Published : Aug 14, 2020, 4:44 AM IST

தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நடிகை நிக்கி கல்ராணி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
"அனைவருக்கும் வணக்கம் கடந்த வாரம் நான் கோவிட்-19 பரிசோதனை மேற்கொண்டேன்.

இதில் எனக்கு நோய்த் தொற்று இருப்பதாக முடிவுகள் வந்தன. கரோனா வைரஸ் பற்றி நிறைய தவறான புரிதல்கள் உள்ளன. எனவே எனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நிக்கி கல்ராணியின் கடிதம்
நல்லவேளையாக எனக்கு லேசான பாதிப்பே இருந்தது. தொண்டையில் பிரச்னை, காய்ச்சல், நுகர்வு உணர்வு, நாக்கில் சுவை உணர்வு இல்லாமல்போனது உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தன. ஆனால், தேவையான எல்லா வழிமுறைகளும் பின்பற்றி நான் தேறி வருகிறேன். வீட்டில் தனிமையில் இருப்பதை நான் அதிர்ஷ்டமாக உணர்கிறேன்.
இது அனைவருக்கும் பயம் தரும் ஒரு காலகட்டம் என்பது எனக்குத் தெரியும். நாம் பாதுகாப்பாக இருப்பதும் மற்றவரின் பாதுகாப்பை நினைவில் கொள்வதும் முக்கியம். நான் இதிலிருந்து மீண்டு வருவேன் என்று எனக்குத் தெரியும். இந்த நோயால் எனது பெற்றோர், வயதானவர்கள், என் நண்பர்கள் என மற்ற அனைவரும் மோசமாக பாதிக்கப்படலாம் என்று நினைக்கும் போது பயமாக இருக்கிறது.

எனவே முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளைக் கழுவுவது ஆகியவற்றை உறுதி செய்துகொள்ளுங்கள். கண்டிப்பாக தேவை இருந்தால் மட்டும் வெளியே செல்லுங்கள். பல மாதங்கள் வீட்டிலேயே இருப்பது எரிச்சலை தரும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இதற்கு முன் நாம் சந்தித்திராத ஒரு சூழலில் இப்போது வாழ்கிறோம்.

இது சமூகத்துக்கு நீங்கள் உங்கள் பங்கை ஆற்றும் நேரம். உங்கள் குடும்பங்களுடன் நேரத்தை செலவிடுங்கள். நண்பர்களுடன் இணைந்து இருங்கள். மன நலனை பாதுகாத்துக் கொள்ளுங்கள். வீட்டிலேயே இருங்கள் பாதுகாப்பாக இருங்கள்" எனக் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details