தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஜிவி பிரகாஷ் பட நடிகை அறுவை சிகிச்சைக்காக அனுமதி! - நிகிஷா படேல்

நடிகர் ஜிவி பிரகாஷ் பட நடிகை அறுவை சிகிச்சை ஒன்றிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

filepic

By

Published : Apr 27, 2019, 1:41 PM IST

தலைவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிகிஷா படேல். இதன்பின் இவர் 'என்னமோ ஏதோ', 'கரையோரம்', 'நாரதன்' 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

இவர் தற்போது இயக்குநர் எழில், ஜிவி.பிரகாஷை வைத்து இயக்கியுள்ள படத்தில் ஜிவி-க்கு ஜோடியாக நடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படம், காதல், காமெடி, கலந்த படமாக உருவாகியுள்ளது. இதற்கான படபிடிப்பை முடித்தவுடன் அறுவை சிகிச்சை ஒன்றிற்காக நிகிஷா படேல், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 'சில நாட்களுக்கு முன் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இருப்பினும் எழில் அவர்களின் படத்தில் என்னுடைய பாகத்தின் படப்பிடிப்பை நான் முடித்துவிட்டேன். இந்தப் படத்தில் ஜிவி. பிரகாஷ் மற்றும் சதீஷுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவங்கள். மருத்துவமனையில் இருந்து குணமாகி வீடு திரும்பியதும் எனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்துவேன்' என தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details