தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

#வலிமை - அஜித்துடன் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா? - வலிமை

’வலிமை’ என அஜித் படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே நஸ்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘வலிமை’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

Actress Nazriya post about Thala Ajith #Valimai

By

Published : Oct 21, 2019, 6:38 PM IST

அஜித்தின் ‘வலிமை’ படத்தின் மூலம் நஸ்ரியா தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

'ராஜா ராணி', 'வாயை மூடிப் பேசவும்' போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார் நஸ்ரியா. இவர் தமிழில் கடைசியாக ஜெய்யுடன் ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு மலையாள நடிகர் பகத் பாசிலை காதல் திருமணம் செய்துகொண்டார். ஆனாலும் சினிமாவை விட்டு விலகாமல் இருந்தார்.

2018ஆம் ஆண்டு ’கூடே’ எனும் மலையாள திரைப்படத்தில் நடித்திருந்தார். 'வரதன்', 'கும்பலங்கி நைட்ஸ்' ஆகிய படங்களில் தயாரிப்பாளராக பணியாற்றினார். தற்போது அவர் அஜித்தின் ‘வலிமை’ படத்தில் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ’வலிமை’ என அஜித் படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே நஸ்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘வலிமை’ எனக் குறிப்பிட்டிருந்தார். அதன்பிறகு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: #BXR பாக்ஸிங் ஜிம்மில் 'தர்பார்' சண்டைக் காட்சி

ABOUT THE AUTHOR

...view details