விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான 'நானும் ரெளடி தான்' திரைப்படம் வெளியாகி வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் மீண்டும் 'நானும் ரெளடி தான்' பட கூட்டணியான விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்னும் படத்தை இயக்கியுள்ளார்.
இதில் சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லலித்குமார், விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணியில் படக்குழுவினர் விறுவிறுப்பாக ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. அதன்படி படத்திற்கு நயன்தாராவே டப்பிங் பேச தொடங்கியுள்ளார். இதனை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.