தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

காதலருடன் அத்திவரதரை தரிசித்த நயன்தாரா..! - nayanthara

காஞ்சிபுரம்: நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அத்திவரதரை தரிசித்த காணொலி இணையத்தில் வைரலாகியுள்ளது.

nayanthara

By

Published : Aug 15, 2019, 6:18 PM IST

Updated : Aug 15, 2019, 7:01 PM IST

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் கடந்த ஜூலை 1ஆம் தொடங்கியது. 48 நாட்கள் நடைபெறும் அத்திவரதர் வைபவம் வருகின்ற 17ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, இன்று பகல் 12 மணியுடன் விஐபி, விவிஐபி தரிசனம் நிறுத்தப்பட்டது. இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், பக்தர்கள் அதிகளவில் காஞ்சிபுரத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதேபோல் நடிகை நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் நேற்று நள்ளிரவு அத்தி வரதரை தரிசனம் செய்தார்.

அத்திவரதரை தரிசிக்க வந்த நயன்தாரா

சிறப்பு தரிசனத்திற்கு பிறகு கோயில் நிர்வாகம் சார்பில் நயன்தாரவிற்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நயன்தாரா அத்திவரதரை தரிசிக்க வந்த காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், நடிகர் ரஜினிகாந்த், த்ரிஷா, பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் அத்திவரதரை தரிசித்தது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Aug 15, 2019, 7:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details