நயன்தாரா ரஜினியுடன் 'அண்ணாத்த' படத்தில் நடித்துள்ளார். இப்படம் நவம்பர் 4ஆம் தேதி தீபவாளி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
அதே போல் விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தாவை வைத்து 'காத்துவாக்குல ரெண்டு' படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்து, இறுதிக்கட்டபணிகளில் உள்ளது.
மேலும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிப்பில், 'கூழாங்கல்', 'ராக்கி' உள்ளிட்ட படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்நிலையில், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் மஹாராஷ்டிராவில் உள்ள ஸ்ரீரடி சாய்பாபா கோயில், மும்பை சித்தி விநாயகர் மஹாலட்சுமி கோவில், மும்பதேவி கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று வழிபட்டனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: சமூக வலைதளங்களில் ஏன் கணக்கு இல்லை? - நயன்தாரா விளக்கம்